YAZZ STUDIOS
Neer Oli Tharum · Rajapalayam cover

May 2026

நீர் ஒளி தரும்

Neer Oli Tharum · Rajapalayam

Mukund

A song for Rajapalayam's solar and green-hydrogen plant — and for the idea that a town's own water and sunlight can turn a municipality into a green corporation.

Lyrics & translation

பல்லவி

நீர் ஒளி தரும்
நம்ம ராஜ பாளை யத்துக்கும் வழி தரும்!
Water will give us light —
and show our Rajapalayam the way!

வேற வழியில்ல சாமி
வாழ இது தாண்டா சாவி
There's no other way, friend —
this is the key to living.

சூரியனக்கொண்டா! மின்சாரம் கண்டா!
நீரியமும் தலை திமிரும் தானா
ஹோய்...
Bring in the sun! There's your electricity!
And hydrogen rises, head held high, all on its own —
hoy…

நீர் ஒளி தரும்
நம்ம ராஜ பாளை யத்துக்கும் வழி தரும்! ஹோய்...
Water will give us light —
and show our Rajapalayam the way! Hoy…

சரணம் 1

சூரியனத்தான் யாரு படச்சான்
யாருக்கும் தெரியாது சாமி!
Who made the sun?
Nobody knows, friend!

நீருக்குள்ள பல மாயம் வெச்சான் ஆதாரம் தான் நம்ம பூமிHe hid many wonders inside water — our earth is the proof.

நம்ம ஊருக்குள்ள
எண்ணை இல்லயப்பா !
In our town
there's no oil, you see!

எண்ணை இல்லாத ஊரொன்று இருந்தால்
இதுவே துணை நிற்கும் பார்!
If there's a town without oil,
watch — this is what will stand by it!

தண்ணிய உடச்சிடு கெடச்சதெல்லாம் சேர்த்திடுSplit the water, gather everything it gives —

Oxygen hydrogen பிரிய பிரிய ஊற்றெடு!as oxygen and hydrogen part, let it spring forth!

ஏரிய நிறைச்சிடு
வயலும் வாழ்வும் ஜெயிச்சிடு
Fill the lakes,
let the fields and our lives win through.

பாருக்கு உரைத்திடு பாடம் சொல்லு!Tell the world — teach it the lesson!

சரணம் 2

மூச்சு முட்டும் வியாதி தந்தா
யாருக்கும் ஆகாது சாமி!
If it brings sickness that chokes our breath,
it's good for no one, friend!

தூய்மைக்கு தான் போராடுவோம்
காத்துக்கும் காவல்கள் வேணும்
We'll fight for clean air —
even the wind needs guarding.

மாற்றம் வேணுமப்பா
மாயம் இல்லையப்பா!
We need change —
and it's no magic trick!

பெட்ரோல் டீசல் பட்டதெல்லாம் போதும்
பார்வை மாற்றிடப்பா
Enough of what we've suffered from petrol and diesel —
change the way you see it.

பாரத பூமிக்கு
பெருமை வந்து சேருமே
Pride will come
to the land of Bharat.

பாரதி பார்வையில்
பட்டி தொட்டி ஓசருமே
Just as Bharathi dreamed,
every hamlet and village will rise.

வளர்ந்திடும் கிராமமே
வேலை வசதி உயிருமே
The villages will grow,
and jobs and comforts will rise.

வருகிற சந்ததி காப்போமே!We'll protect the generations to come!

Credits

Lyrics
Raja Amirthalingam
Singer, composer, arranger & orchestration
Mukund
Guitars
Mridul Gopal
Nadaswaram
Nadas Bala
Rhythm mix
Balasubramani Bala
Final mix & master
Paul Thomas, Muzico Studios

← All music