YAZZ STUDIOS
Aazhi Mazhai cover

July 2026

ஆழி மழை

Aazhi Mazhai

Ragavan Manian · Mukund

A monsoon jazz ballad — raga Amritavarshini, voiced as jazz harmony.

Watch the film

Watch the film

Lyrics & translation

शं नो मित्रः शं वरुणः …May Mitra and Varuna be auspicious...

ஆழி மழைOcean rain

மழை மழை .. மழை மழை ..Rain, rain... rain, rain...

மழைத் துளி.. மழைத் துளி.. கனவில் ஜொலிக்கும்Raindrops shimmer in dreams

வெயில் அதில் சிலிர குளிக்கும்Sunlight bathes and shivers

தொடர்மலை கடந்து விறைந்து விறைந்து நடந்துCrossing ranges, hurrying on

தொலைவினில் இருந்து பறந்து பறந்து வாFlying from afar, come

மழை மழை .. மழை மழை ..Rain, rain... rain, rain...

மழைத் துளி.. மழைத் துளி.. கனவில் ஜொலிக்கும் ..Raindrops shimmer in dreams

வெயில் அதில் …Sunlight in that...

தொடர்மலை …Continuous mountains...

கடந்து விறைந்து விறைந்து நடந்து இருந்து பறந்து வாCrossing, hurrying, coming from afar

மழை, மழை ..Rain, rain...

ஆழி மழை, ஆழி மழை .. ஆழி மழை ..Ocean rain, ocean rain... ocean rain...

शं वरुण: शं वरुण: …Varuna, Varuna...

மேகமே விரி விரி,Clouds, expand and spread,

வானமே பொழி பொழிSky, pour and pour

தாகமே இலை இனி,Thirst, cease now,

போகமாய் விளை கனிFruits bloom as a delight

தூரத்தில் இடிமுழங்கThunder rumbles in the distance

பாரங்கள் உடன் இறங்கBurdens fall away

காததூரம் சுருங்கDistance shrinks away

கீத சலசலப்பு நெறுங்க …Melodies murmur and draw near...

காலப் போக்கில் அடைமழைIn time, the relentless rain

கனவாய்க் கறைந்திடுமோ?Dissolves like a dream?

ஓலம் மிட்ட உலகம் யாவும்Will the crying world

பாலைவன மாய்விடுமோ?Turn into a desert?

ஞாலத்து பூதம் ஐந்தில்Among the five elements of earth

அக்கினி உயர்ந்ததேன்!Why has fire risen?

ஞானத்தை தேடும் மனிதர்Why have humans seeking wisdom

அதிகுணம் குறைந்ததேன்!Lost their true virtue?

வினாக்கள் யாவும் மறைய,All questions vanish,

விடையே மழை நீர்The rain is the answer

வினைப்பயன் அரவே,As karma fades,

ஆறாய்ப் பொழி நீPour down like a river

வினை நலன் உறவே,For virtue to thrive,

விதையே அருமழைநீர்The rain is the seed

இசையாய், (ஸு) ஸ்வரமாய்As music, as melody

ராக மணியாய் வீழ்வாய்Fall as Raga Mani

(ச்வரம் · swaras)

மேகமே விரி விரி,Clouds, expand and spread,

வானமே பொழி பொழிSky, pour and pour

(ச்வரம் · swaras)

தாகமே இலை இனி,Thirst, cease now,

போகமாய் விளை கனிFruits bloom as a delight

(ச்வரம் · swaras)

தூரத்தில் இடிமுழங்கThunder rumbles in the distance

பாரங்கள் உடன் இறங்கBurdens fall away

(ச்வரம் · swaras)

காததூரம் சுருங்கDistance shrinks away

கீத சலசலப்பு நெறுங்க …Melodies murmur and draw near...

மழைத் துளி நினைவில் ஜொலிக்கும்Raindrops shimmer in memory

மனங்களை இசையில் நனைக்கும்Drenching hearts in music

शं नो मित्रः शं वरुणः …May Mitra and Varuna be auspicious...

உச்சத்தில் இருந்து உதிரும் நீYou, falling from the heights

உயிர் காக்கும் தெய்வமே …Are the life-saving divine

ஆழி மழைOcean rain

Credits

Composed, melody, lyrics, sung, violin, flute & sax
Ragavan Manian
Co-composed, arranged, orchestrated & produced
Mukund
Tabla, mridangam & drums
Muthu Kumar
Guitar
Mridul Gopal
SFX, mix & master
Balasubramani Bala, Soundtask Studios

← All music